Enable Javscript for better performance
தட்டுப்பாடின்றி குடிநீர் கோரி மறியல்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் நகரில் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்ய நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
    பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யாததால், வாடகை வாகனங்கள் மூலமாக குடிநீர் வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நகராட்சிக்குள்பட்ட கம்பன்நகர், முத்துநகர் உள்ளிட்ட பகுதிகளில் 15 நாள்களுக்கு ஒருமுறையே குடிநீர் வருகிறதாம். அதையும் குறைந்த நேரத்திலேயே நிறுத்திவிடுவதால் குடிநீர்ப் பற்றாக்குறையால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
    இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லையாம். இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யாததால் ஆத்திரமடைந்த சாமியப்பாநகர், பாலாஜிநகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் காலிக் குடங்களுடன் பெரம்பலூர் - எளம்பலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
    தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார், நகராட்சியினர் அங்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் நடத்தி, தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அளித்த உறுதியின்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இப்போராட்டத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai