Enable Javscript for better performance
நகராட்சியில் 100 சதவீத  கழிப்பறைகள் பயன்பாடு: ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    நகராட்சியில் 100 சதவீத  கழிப்பறைகள் பயன்பாடு: ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம்

    By DIN  |   Published on : 10th March 2017 07:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் நகராட்சிப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் 100 சதவீதம் கழிப்பறைகளைப் பயன்படுத்தி வருகின்றனர் என்று அறிவிக்கப்பட உள்ளதால், பொதுமக்களுக்கு இதில் ஆட்சேபனை மற்றும் ஆலோசனைகள் இருந்தால் 10 நாள்களுக்குள் நகராட்சி அலுவலகத்தில் தெரிவிக்கலாம்.
    பெரம்பலூர் நகராட்சிப் பகுதி பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளிலும், பொதுக் கழிப்பிடங்களிலும் 100 சதவீதம் கழிப்பறைகளை பயன்படுத்துகின்றனர், திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதில்லை என்று பெரம்பலூர் நகராட்சி அறிவிக்க இருக்கிறது.
    இதற்காக இந்நகராட்சியில் உள்ள அனைத்துப் பள்ளி மாணவர்களிடம் அவர்கள் படிக்கும் பள்ளிகள் மற்றும் வீடுகளிலும் கழிப்பறையைத்தான் பயன்படுத்தி வருகிறோம் என்ற உறுதிமொழி பெறப்பட்டுள்ளது.  
    இந்நகரில் இயங்கும் சுயஉதவிக்குழுக்கள் மூலம், அவர்களது பகுதியில் வசிக்கும் அனைத்து பொதுமக்களிடமும் தாங்கள் கழிப்பறைகளைத்தான் பயன்படுத்தி வருகிறோம் என்ற உறுதிமொழிக் கடிதங்களும் பெறப்படுகின்றன.
    பெரம்பலூர் நகராட்சிப் பகுதி முழுவதும் 100 சதவீத பொதுமக்கள் பொது இடங்களைத் திறந்தவெளி கழிப்பிடங்களாக பயன்படுத்துவது இல்லை என்று அறிவிக்க, முதற்கட்டமாக இந்நகராட்சிக்குள்பட்ட 4, 5, 6, 7, 8 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் கழிப்பறைகளை 100 சதவீதம் சதவீதம் பயன்படுத்தி வருகின்றனர் என்று விரைவில் அறிவிக்கபட உள்ளது.
    எனவே, இதுகுறித்து பொதுமக்கள் தங்களது ஆலோசனை மற்றும் ஆட்சேபனைகளை 10 நாள்களுக்குள் பெரம்பலூர் நகராட்சி ஆணையருக்கு கடிதம் மற்றும் மின்னஞ்சல் (C‌o‌m‌m‌r.‌p‌e‌r​a‌m​b​a‌l‌u‌r​@‌t‌n.‌g‌o‌v.‌i‌n,​​ ‌ma‌i‌l‌t‌o:​C‌o‌m‌m‌r.‌p‌e‌r​a‌m​b​a‌l‌u‌r​@‌t‌n.‌g‌o‌v.‌i‌n)​  மூலம் ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என, நகராட்சி நிர்வாகம் சார்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai