Enable Javscript for better performance
பிரபல செல்லிடபேசி கடை உரிமையாளருக்கு பிடியாணை- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் புறநகர்ப் பேருந்து நிலையப் பகுதியைச் சேர்ந்தவர் அய்யம்பெருமாள், வழக்குரைஞர்.
    இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பிரபல தனியார் செல்லிடபேசி விற்பனை நிலையத்தில் ரூ. 4 ஆயிரத்துக்கு சாம்சங் செல்போன் வாங்கினாராம்.
    இந்நிலையில், வாங்கிய ஒரு சில நாள்களிலேயே அந்த செல்லிடபேசி பழுதடைந்ததால் அதைப் பழுதுநீக்கித் தருமாறு கடை ஊழியர்களிடம் அய்யம்பெருமாள் கேட்டாராம். அதற்கு அவர்கள் வெளியில் பழுது நீக்கி வந்து ரசீதை அளித்தால், உரிய தொகை வழங்கப்படும் என கூறினராம்.  அவர்கள் கூறியபடி செய்தும் உரிய காப்பீட்டுத் தொகையை வழங்காமல் அலைக்கழித்தனராம். இதனால் அய்யம்பெருமாள் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
     வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி கலியமூர்த்தி, அய்யம்பெருமாளுக்கு ரூ. 13,162 வழங்க வேண்டுமென, கடந்த 2016-ல் உத்தரவிட்டனர். ஆனால், அந்தத் தொகை வழங்கப்படாததால் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
    இதையடுத்து, செல்லிடபேசி கடை உரிமையாளருக்கு பிடியாணை பிறப்பித்து வியாழக்கிழமை உத்தரவிட்டார் நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி கலியமூர்த்தி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai