Enable Javscript for better performance
மானியத்தில் உலர் தீவனம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்போர் நிவாரண திட்டத்தின் கீழ், மானிய விலையில் உலர் தீவனம் பெற விண்ணப்பிக்கலாம்.
    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில், தமிழ்நாடு அரசு வறட்சி நிவாரணத் திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், செட்டிக்குளம், வி.களத்தூர், வேப்பூர் ஆகிய கால்நடை மருந்தகங்களில் உலர் தீவனக் கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
    வறட்சி நிலை சீராகும் வரை, ஒரு கால்நடைக்கு நாள்தோறும் 3 கிலோ வீதம் அதிகபட்சமாக 3 கால்நடைகளுக்கு, வாரத்திற்கு 105 கிலோ வரை கிலோ ரூ. 2-க்கு தீவனம் வழங்கப்படுகிறது. எனவே, கால்நடை வளர்ப்போர் தங்களது குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் உலர் தீவன கிடங்கு அமைந்துள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகிப் பயன் பெறலாம்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai