Enable Javscript for better performance
மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில் சிறப்பிடம்: காவலருக்குப் பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில் சிறப்பிடம்: காவலருக்குப் பாராட்டு

    By DIN  |   Published on : 10th March 2017 07:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற, பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை காவலரை வியாழக்கிழமை பாராட்டி வாழ்த்தினார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சோனல்சந்த்ரா.
    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நூத்தப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கி. இளங்கோவன், மாவட்ட ஆயுதப்படை முதல்நிலை காவலர்.
    இவர் கடந்த ஜன. 7,8-களில் சென்னையில் நடைபெற்ற 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில் பங்கேற்று நீளம் தாண்டுதலில் தங்கம் வென்றார்.
     தொடர்ந்து, கடந்த பிப். 21 முதல் 25 வரை தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள கோச்பவுலி மைதானத்தில் நடைபெற்ற தேசியளவிலான 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில் 4 க்கு 400 தொடரோட்டத்தில் வெண்கலம் வென்றார்.
    இதன் மூலம் வரும் ஏப்ரலில் சீனாவில் நடைபெற உள்ள ஏசியன் மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில் இவர் பங்கேற்கத் தகுதி பெற்றார். தமிழக காவல் துறைக்குப் பெருமை சேர்த்த இளங்கோவனை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வியாழக்கிழமை வாழ்த்தி பாராட்டுச் சான்றிதழ் அளித்தார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சோனல்சந்த்ரா.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai