Enable Javscript for better performance
’கேடு தரும் சீமைக்கருவேல மரங்களை அழிப்பது பொதுமக்களின் கடமை'- Dinamani

சுடச்சுட

    

    ’கேடு தரும் சீமைக்கருவேல மரங்களை அழிப்பது பொதுமக்களின் கடமை'

    By DIN  |   Published on : 11th March 2017 03:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் சீமைக்கருவேல மரங்களை வேருடன் அழிப்பது பொதுமக்கள் ஒவ்வொருவரின் கடமையாகும் என்று பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஏ. நசீமாபானு.
    பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட துறைமங்கலம் ஏரி, சிறுவாச்சூர் அருள்மிகு
    மதுரகாளியம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலம், எளம்பலூர் உப்போடை ஆகிய பகுதியில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகளை நீதிபதி நசீமாபானு வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் ஏரியில் சீமைக்கருவேல மங்கள் அகற்றும் பணியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட நீதிபதி நஷிமாபானு கூறியது:
    சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் ஆணையின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
    பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளிலும், அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களிலும் உள்ள சீமைக்கருவேல மரங்கள் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.
    மேலும், சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் சீமைக்கருவேல மரங்களை வேருடன் அழிப்பது பொதுமக்கள் ஒவ்வொருவரின் கடமையாகும். எனவே, பொது மக்கள் தாங்களாகவே முன்வந்து தங்களுக்கு சொந்தமான நிலங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல் மரங்களை வேருடன் அகற்றிக் கொள்ள வேண்டும்.
    பொதுமக்கள் அனைவரும் சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அழித்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்றார் அவர்.
    தொடர்ந்து, குன்னம் வட்டத்திற்குள்பட்ட லப்பைக்குடிகாடு அருகேயுள்ள அரங்கன்பாதியில் ஏரியில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படுவதையும் பார்வையிட்டார் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நஷிமா பானு.
    ஆய்வின்போது, கூடுதல் தலைமை நீதித்துறை குற்றவியல் நடுவர் சஞ்சீவி பாஸ்கர், குற்றவியல் நீதித்துறை நடுவர் சுஜாதா, வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai