Enable Javscript for better performance
நாளை தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 12) நடைபெற உள்ளது.
    இத்தடுப்பூசி குறித்து சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்திகளினாலும், முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வருவதாலும், உடல்நலக்குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினாலும் பல பெற்றோர் தடுப்பூசிக்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
    இதனால், பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் குழந்தைகள் தடுப்பூசி போடப்படாமல் உள்ளனர்.
    இந்த தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானதாகும். மேலும் நோய்களினால் அதிகம் பாதிக்கப்படும் 9 மாதம் முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகளில் 100 சதவீதம் பேருக்கு, இத்தடுப்பூசி போடுவதன் மூலம் பெரியவர்களுக்கு ஏற்படும் தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய் தொற்றை தடுக்க முடியும்.
    இதன்மூலம், தட்டம்மை மற்றும் ரூபெல்லா என்னும் கொடிய நோய்த்தொற்றை நம் சமூகத்திலிருந்து முற்றிலுமாக நீக்க முடியும். இதை கருத்தில் கொண்டு ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி முகாம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற உள்ளது. முகாமில், 9 மாதம் முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும்.
    தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் பணி செல்லும் பெற்றோர்களின் வசதிக்காக, இந்த முகாம் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என, சுகாதாரத்துறை துணை இயக்குநர் சம்பத் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai