Enable Javscript for better performance
பெரம்பலூரில் மார்ச் 14-இல் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூரில் மார்ச் 14-இல் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

    By DIN  |   Published on : 11th March 2017 03:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகர்வோருக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் மார்ச் 14 ஆம் தேதி நடைபெறுகிறது என்றார் செயற்பொறியாளர் (பொ) க. அறிவழகன்.
    இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூர் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில், இயக்குதலும், பராமரித்தலும் செயற்பொறியாளர்கள் முன்னிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக (தமிழ்நாடு மின்சார வாரியம்) பெரம்பலூர் அலுவலகத்தில் மார்ச் 14 ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. கூட்டத்தில், பெரம்பலூர் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகர்வோர் தங்களுடைய குறைகளை நேரில் தெரிவித்து பயன்பெறலாம் என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai