Enable Javscript for better performance
மார்ச் 23-இல் வேலை பழகுநர் பயிற்சி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    திருச்சியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மார்ச் 23 ஆம் தேதி நடைபெறும் வேலை பழகுநர் பயிற்சி முகாமில், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடையோர் பங்கேற்கலாம் என்றார் பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ப. மஞ்சுளா தேவி.
    இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலம், திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 23 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை வேலைபழகுநர் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. முகாமில் 80-க்கும் மேற்பட்ட முன்னனி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இதில், அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்த, அனைத்து பிரிவு மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். பயிற்சி முகாமில் கலந்துகொள்ள விரும்புவோர் தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகி மார்ச் 14 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai