Enable Javscript for better performance
விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.46 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.46 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

    By DIN  |   Published on : 11th March 2017 03:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு, தனியார் காப்பீட்டு நிறுவனம் ரூ. 46 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென, பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஏ. நஷிமா பானு உத்தரவிட்டார்.
    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், தேனூர் கிராமத்தை சேர்ந்தவர் நல்லுசாமி மகன் அருண் (29). மென்பொருள் பொறியாளர். இவர், காஞ்சிபுரம் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தார்.
    இந்நிலையில், கடந்த 18.11.2013 ஆம் தேதி கும்மிடிப்பூண்டி நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தபோது, அவ்வழியே சென்ற சிற்றுந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த அருண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
    இந்த நிலையில், அவரது மனைவி அபிராமி (26), தாய் சந்திரா (48), தந்தை நல்லுசாமி (59) ஆகியோர் விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி, கடந்த 16.12.2013-ல் பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
    வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஏ. நஷிமா பானு, விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 46,06,004 வழங்க வேண்டுமென, காப்பீட்டு நிறுவனத்திற்கு புதன்கிழமை உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai