Enable Javscript for better performance
விபத்தில் காயமடைந்து கோமாவுக்கு சென்றவருக்கு ரூ.1 கோடி இழப்பீடு- Dinamani

சுடச்சுட

    

    விபத்தில் காயமடைந்து கோமாவுக்கு சென்றவருக்கு ரூ.1 கோடி இழப்பீடு

    By DIN  |   Published on : 11th March 2017 03:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மோட்டார் சைக்கிள் மோதி கோமா நிலையில் உள்ள மென் பொறியாளருக்கு ரூ. 1 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென, தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவிட்டார் பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஏ. நஷிமா பானு.
    பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் மின்நகரை சேர்ந்தவர் துரைசாமி மகன் சதீஷ்குமார் (35). இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென் பொறியாளராக பணிபுரிந்து வந்தார்.
    இந்நிலையில், கடந்த 5.6.2013 ஆம் தேதி கொளத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே நடந்துசென்றார். அப்போது, அவ்வழியே சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் சதீஸ்குமார் பலத்த காயமடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், கொளத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து கொளத்தூரை சேர்ந்த பாலசுப்ரணியனிடம் விசாரணை மேற்கொண்டனர். விபத்தில் காயமடைந்து பல்வேறு சிகிச்சை மேற்கொண்ட சதீஸ்குமார் தற்போது கோமா நிலையில் உள்ளார்.
    இதனிடையே, அவரது தந்தை துரைசாமி விபத்துக்கான காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென, பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 11.4.2014-ல் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஏ. நஷிமா பானு, கோமா நிலையில் உள்ள மென் பொறியாளர் சதீஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரூ. 1,04,16,759 வழங்க வேண்டுமென, தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு புதன்கிழமை உத்தரவிட்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai