Enable Javscript for better performance
அரும்பாவூர் ஏரியில் சீமைக்கருவை அகற்றும் பணி- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூர் பெரிய ஏரியில் விக்டரி அரிமா சங்கம் சார்பில், சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் பி. வேலு சனிக்கிழமை தொடக்கிவைத்தார்.
    உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணைபடி, பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடங்கள், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான நீர்நிலைகள், இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.
    சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் அரசுத் துறைகளும், தன்னார்வ அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூர் பெரிய ஏரியில் விக்டரி அரிமா சங்கம் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியை சனிக்கிழமை தொடங்கினர்.
    சீமைக்கருவேல மரங்களை பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு அகற்றும் பணிகளை தொடக்கி வைத்த மாவட்ட வருவாய் அலுவலர் ப. வேலு தெரிவித்தது:
    உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் சீமைக்கருவேல மரங்களை வேருடன் அழிக்க பொதுமக்கள் முன்வர வேண்டும். தனியார் தங்களுக்கு சொந்தமான நிலங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை வேருடன் அகற்ற வேண்டும்.
    அவ்வாறு அகற்றாதபட்சத்தில் சம்பந்தப்பட்ட துறைகள் மூலமாக சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, அதற்குண்டான செலவுத்தொகை நில உரிமையாளர்களிடமிருந்து இருமடங்காக வசூலிக்கப்படும் என்றார்.
    நிகழ்ச்சியில், விக்டரி அரிமா சங்க சாசனத் தலைவர் ஆர். கோபிநாத், மாவட்ட தலைவர் மு. இமயவரம்பன், செயலர் எஸ். அழகுவேல், பாரதிராசா, பொருளாளர் எஸ்.பி. சண்முகதேவன், சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் குழுத் தலைவர் சிவா, செயலர் பி. சிவக்குமார், பொருளாளர் விஜயன், இயக்குநர்கள் செல்வராஜ், குணசீலன், ஆர். சிவானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai