Enable Javscript for better performance
மளிகை கடையில் ரூ.1 லட்சம் பொருள்கள் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர்- துறையூர் சாலையில் உள்ள மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
    பெரம்பலூர் - துறையூர் சாலையில் உள்ள கல்யாண் நகரில் சின்னதுரை என்பவர் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவர், வெள்ளிக்கிழமை இரவு வியாபாரத்தை முடித்து கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டாராம். சனிக்கிழமை காலை கடையை திறக்கவந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். உள்ளே சென்று பார்த்தபோது ரூ. 70 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான செல்போன் உள்ளிட்ட மளிகை பொருள்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சின்னதுரை அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai