Enable Javscript for better performance
மாவட்டத்தில் பலத்த மழை- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் 9 மணி வரை இடியுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையோரங்களிலும், கால்வாய்களிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
    பெரம்பலூர் ஆலம்பாடி சாலையில் உள்ள பெரியார் சமத்துவபுரத்தில் மின்னல் தாக்கியதில் ஒரு தென்னை மரம் மற்றும் அருகே உள்ள கூலித் தொழிலாளிகளான கவியரசன், அண்ணாதுரை ஆகியோரது வீடுகள் சேதமடைந்தன.
    மழை அளவு: பெரம்பலூர் மாவட்டத்தில் செட்டிக்குளம் - 49 மி.மீ, பெரம்பலூர் - 69 மி.மீ, வேப்பந்தட்டை - 6 மி.மீ, தழுதாழை - 42 மி.மீ, பாடாலூர் - 17 மி.மீ என மொத்தம் 183 மி.மீட்டரும், சராசரியாக 36 மி.மீட்டரும் மழை பெய்தது.
    இந்த மழையின் காரணமாக பெரம்பலூர் நகரின் பெரும்பாலான இடங்களில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது. மேலும், இரவு முழுவதும் அடிக்கடி மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai