Enable Javscript for better performance
ஆலம்பாடியில் அரசின் சாதனைவிளக்க புகைப்படக் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    ஆலம்பாடியில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

    By DIN  |   Published on : 13th March 2017 07:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தில் செய்தி - மக்கள் தொடர்புத் துறை சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி மற்றும் விடியோ படக்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.
    இக் கண்காட்சியில் முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு வழங்கிய நலத் திட்ட உதவிகளின் புகைப்படங்கள். பெரம்பலூர் மாவட்ட அரசு விழாக்களில் ஆட்சியர், பெரம்பலூர் மற்றும் சிதம்பரம் தொகுதி எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள்  மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்று பொதுமக்களுக்கு வழங்கிய நலத்திட்ட உதவிகள் குறித்த புகைப்படங்கள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.  மேலும், தமிழக அரசின் திட்டங்கள் குறித்த விடியோ படக்காட்சியும் காட்டப்பட்டது.
    இவற்றை ஆலம்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமப் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பார்த்து, அரசின் திட்டங்கள் குறித்துக் கேட்டறிந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai