Enable Javscript for better performance
ஏப். 1 முதல் ஓய்வூதியர்களுக்கு வருடாந்திர நேர்காணல்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்ட ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கான வருடாந்திர நேர்காணல் ஏப். 1 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூர் மாவட்டக் கருவூலம் மற்றும் மாவட்டத்தில் உள்ள சார்நிலைக் கருவூலங்களில் ஓய்வூதியம் பெறும் அனைத்து ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு 2017- 2018 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர நேர்காணல் ஏப். 1 முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நேர்காணலுக்கு அனைத்து ஓய்வூதியர்களும் தவறாமல் வரவேண்டும். நேர்காணலுக்கு வராதவர்களுக்கு ஆகஸ்ட்- 2017 ஓய்வூதியம் நிறுத்தப்படும்.
    ஓய்வூதியர்கள் மத்திய அரசின் ஜீவன் பிரம்மன் மின்னணு வாழ்வு சான்றிதழை ஏப். 1 ஆம் தேதிக்குப் பிறகு பெற்றளிப்பதன் மூலமும் நேர்காணல் பதிவு செய்யலாம். இந்த சான்றிதழை அனைத்து இ-சேவை மையம் மற்றும் பொது சேவை மையத்தில் ஆதார் எண், ஓய்வூதியம் தொடர்பான விவரங்களை அளித்து கைவிரல் ரேகை பதிவு செய்து ஓய்வூதியர்கள் பெறலாம்.  1.4.2017-க்குப் பிறகு இச்சான்று பெற்றளிப்பதன் மூலம் நேர்காணலுக்கு வருவதிலிருந்து விலக்கு பெறலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai