Enable Javscript for better performance
தொழிலாளர் நலவாரியஉறுப்பினர் பதிவு முகாம்: நாளை நடைபெறுகிறது- Dinamani

சுடச்சுட

    

    தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் பதிவு முகாம்: நாளை நடைபெறுகிறது

    By DIN  |   Published on : 13th March 2017 07:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கொளக்காநத்தம் கிராமத்தில், தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா மற்றும் ஓட்டுநர் தொழிலாளர் நல வாரியங்களில் தொழிலாளர்களை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 14) நடைபெறுகிறது.
    பெரம்பலூர் ஆட்சியர் க. நந்தகுமார் உத்தரவின்பேரில், தமிழ்நாடு கட்டுமானம், அமைப்புசாரா மற்றும் ஓட்டுநர் தொழிலாளர் நல வாரியங்களில் அதிக தொழிலாளர்களை பதிவு செய்யவும், வாரியங்கள் மூலம் அளிக்கப்படும் நலத்திட்டங்களை பெற்று தொழிலாளர்கள் பயனடையும் வகையிலும் ஆலத்தூர் வட்டம், கொளக்காநத்தம் ஊராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10 முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
    முகாமில் பங்கேற்க வருவோர், தங்களது குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளி மாற்றுச் சான்றிதழ், வயது சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, அரசு அங்கீகரிக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல், 3 பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
    உழவர் அடையாள அட்டை வைத்திருக்கும் தொழிலாளி, பி.எப் பிடித்தம் செய்யப்படும் பணியாளர், அரசு பணியாளர்கள் இத் திட்டத்தின் கீழ் அடையாள அட்டைகள் பெற தகுதியற்றவர்கள். எனவே, தகுதியுள்ள நபர்கள் இந்த முகாமில் பங்கேற்று அரசின் நலத்திட்டங்களை பெறலாம் என, பெரம்பலூர் மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளர் அலுவலகம் சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai