Enable Javscript for better performance
பெரம்பலூரில் நட்சத்திரகலை நிகழ்ச்சிகள் நிறைவு விழா- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் சார்பில், கல்லூரி வளாகத்தில் நட்சத்திர கலை நிகழ்ச்சிகள் நிறைவு விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
    இந்நிகழ்ச்சிகளின் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தலைமை வகித்து கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன், குத்து விளக்கேற்றி விழாவை தொடக்கி வைத்தார்.
    விழாவில், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் திவ்யதர்ஷினி, பிர்யங்கா, ஈரோடு மகேஷ், கலைஞர்கள் முல்லை, கோதண்டம், விவேக் பாலாஜி, ராமர், வைஷ்ணவி ஆகியோரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    தொடர்ந்து நடைபெற்ற 2 ஆம் நாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, கு. ஞானசம்பந்தம், புதுக்கோட்டை பி.எஸ்.கே கல்வி நிறுவனங்களின் நிறுவனர் பி.எஸ். கருப்பையாவுக்கு டிஸ்டிக்யூஸ்டு விருதும், பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கே. வரதராஜனுக்கு சேஞ்ச் மேக்கர் விருதும், ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம். சிவசுப்ரமணியனுக்கு ப்ரபஷனல் எக்ஸலன்ஸ் விருதும் வழங்கி பாராட்டினார்.  விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற திரைப்பட நடிகர் ஜெயம் ரவி, நடிகை காஜல் அகர்வால் ஆகியோர் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினர். தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    இந்த விழாவில், கல்லூரி தாளாளர் அ. சீனிவாசன், துணைத் தலைவர்கள் சீ. கதிரவன், அனந்தலட்சுமி கதிரவன், கல்லூரி முதல்வர்கள், துணை முதல்வர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai