Enable Javscript for better performance
மந்திரவாதி வீட்டில் பெண் சடலம்: அகோரி பூஜைக்காக சடலத்தை விற்ற மயான ஊழியர் உள்ளிட்ட 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மந்திரவாதி வீட்டில் பெண் சடலம்: அகோரி பூஜைக்காக சடலத்தை விற்ற மயான ஊழியர் உள்ளிட்ட 3 பேர் கைது

    By DIN  |   Published on : 13th March 2017 09:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மந்திரவாதி வீட்டில் கைப்பற்றப்பட்ட பெண்ணின் சடலம் சென்னையில் தற்கொலை செய்துகொண்டவரின் சடலம் என்பது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, அதை மந்திரவாதிக்கு விற்ற மயான ஊழியர் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
    பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் அருகேயுள்ள எம்.எம்.நகர் பகுதியில் ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக வெள்ளிக்கிழமை கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில், அங்கு ஒரு மரப்பெட்டியில் அழுகிய நிலையில் இருந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றினர்.
    மேலும், அந்த வீட்டில் மாந்திரீக பொருட்களும், மண்டை ஓடுகளும் இருந்தது குறித்து பெரம்பலூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொ) சிவசுப்ரமணியன் வழக்குப் பதிந்து, அந்த வீட்டில் தங்கியிருந்த கார்த்திக் (33), அவரது மனைவி தீபிகா (எ) நஷிமா (27) உள்ளிட்ட 4 பேரை கைது செய்தார்.  அவர்களிடம் நடத்திய விசாரணையில், அந்த வீட்டில் தனது மனைவியுடன் வாடகைக்கு வசித்து வந்த கார்த்திக், அரசியல்வாதிகள், மக்களின் பிரச்னைகளை மாந்திரீகம் மூலம் சரிசெய்வதாகக் கூறி பணம் பறித்துவந்தது தெரியவந்தது.
    இந்த நிலையில், கார்த்திக்கின் மாந்திரீக வேலைக்காக இளம்பெண்ணின் சடலம் தேவைப்பட்டதால், சென்னை மயிலாப்பூரில் உள்ள மயான ஊழியர்களை அணுகி, அவர்களிடம் ரூ. 20 ஆயிரம் கொடுத்து சடலம் கேட்டுள்ளார். இதையடுத்து, அவர்கள் கடந்த ஜன. 18 ஆம் தேதி தற்கொலை செய்து, பிரேத பரிசோதனைக்குப் பிறகு புதைக்கப்பட்ட, சென்னை தேனாம்பேட்டை எம்.எம்.கார்டன் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகள் அபிராமியின் (21) சடலத்தை, கார்த்திக்குக்கு தோண்டி எடுத்து கொடுத்துள்ளனர். அந்த சடலத்தை பெரம்பலூரில் உள்ள தனது மாடி வீட்டில் வைத்து கார்த்திக் அகோரி பூஜை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸார், மயான ஊழியர்கள் வினோத்குமார் உள்ளிட்ட 3 பேரை சனிக்கிழமை கைது செய்து, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai