Enable Javscript for better performance
"ரூபெல்லா தடுப்பூசியால்குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாது'- Dinamani

சுடச்சுட

    

    "ரூபெல்லா தடுப்பூசியால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாது'

    By DIN  |   Published on : 13th March 2017 07:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரூபெல்லா தடுப்பூசி போடுவதால் குழந்தைகளுக்கு எந்த பக்கவிளைவுகளோ, பாதிப்போ ஏற்படாது என்றார் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் சம்பத்.
    பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமை தொடக்கி வைத்து, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் சம்பத் கூறியது:
    பெரம்பலூர் மாவட்டத்தில் தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி போடும் பணி கடந்த பிப். 6 முதல் மார்ச் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
    இதில், 9 மாதம் முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி போடப்படுகிறது. பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் சுமார் 22,878 குழந்தைகள் உள்ளனர். இதில், சனிக்கிழமை வரை (மார்ச் 11) வரை 12,884 குழந்தைகளுக்க தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
    இந்த தடுப்பூசி போடுவதன் மூலம் பக்க விளைவுகளோ பாதிப்போ ஏற்படாது. மிகவும் பாதுகாப்பானது.
    எனவே, பெற்றோர் எவ்வித அச்சமும் இன்றி தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசியை போட வேண்டும் என்பதையும், பெற்றோர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த முகாம் நடத்தப்படுகிறது.
    இந்த தடுப்பூசி முகாம், நகராட்சிக்குள்பட்ட அரசு நகர்ப்புற சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில் மார்ச் 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்றார் அவர்.
    தொடர்ந்து நடைபெற்ற முகாமில், பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட 353 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. முகாமில், மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் மருத்துவர் அரவிந்தன் உள்ளிட்ட மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai