Enable Javscript for better performance
தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க ஆலோசனைக் கூட்டம்

    By DIN  |   Published on : 14th March 2017 06:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூரில், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க  மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் இரா. சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் வீ. ஞானசேகரன் முன்னிலை வகித்தார்.
    மாவட்ட சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் பி. காமராஜ் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எழுத்தாளர் மணவை முஸ்தபா, சிறுகடம்பூர் நந்தினி ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, உயிரிழந்த நந்தினியின் குடும்பத்தினருக்கு அரசு வேலை மற்றும் ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும்.
    பெரம்பலூரில் பொதுமக்களை ஏமாற்றி, பல ஆண்டுகளாக மாந்த்ரீக செயல்களில் ஈடுபட்டிருந்த கார்த்திக்கின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தாத காவல் துறையினரை கண்டிப்பது. 2017-க்கான உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துதல். பெரம்பலூரில், இயக்கத்தின் மத்திய மண்டல குழு கூட்டத்தை ஏப்ரல் மாதத்தில் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், நிர்வாகிகள் தமிழோவியன், தங்கவேல், சதீஷ், பிச்சைபிள்ளை, ரகு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்டத் தலைவர் காப்பியன் வரவேற்றார். துணைத்தலைவர் மொகைதீன் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai