Enable Javscript for better performance
பெரம்பலூரில் 19-ல் அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    "பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் கற்கும் பாரதம் திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகள், 15 முதல் 80 வயது வரையிலான எழுத, படிக்க தெரியாதவர்கள் அனைவருக்கும் மார்ச் 19 ஆம் தேதி அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடைபெற உள்ளது.
    இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 284 பயனாளிகள் தேர்வு எழுத உள்ளனர்.
    இத்தேர்வானது, அந்தந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. கற்கும் பாரத மையத்தில் படித்தவர்களும், மையத்தில் படிக்காத இதர கல்லாதவர்களும் தேர்வு எழுதலாம். மேலும், கடந்த முறை நடத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களும், இத்தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம்' என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. முனுசாமி தெரிவித்துள்ளார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai