Enable Javscript for better performance
பெரம்பலூர் மாவட்டத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்து பணிகள் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்து பணிகள் தொடக்கம்

    By DIN  |   Published on : 14th March 2017 06:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்டத்தில் நீர்வள ஆதாரத் துறை பராமரிப்பின் கீழ் உள்ள நீர் நிலைகளில் குடிமராமத்து மேற்கொள்ளும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.
    பெரம்பலூர் அருகேயுள்ள அரணாரை பெரிய ஏரியில், குடிமராமத்து மேற்கொள்ளும் பணிகள் தொடக்க விழா பெரம்பலூர் எம்எல்ஏ இரா. தமிழ்செல்வன், குன்னம் எம்எல்ஏ ஆர்.டி. ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில், ஆட்சியர் க. நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.
    இத்திட்டத்தில், நீர்வள ஆதாரத் துறை பராமரிப்பின் கீழ் உள்ள நீர்நிலைகளில் வரத்து வாய்க்கால், கால்வாய்கள், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகள் ஆகியவற்றை புனரமைத்தல், பலப்படுத்துதல் மற்றும் கலிங்குகள், மதகுகளை மறுகட்டுமானம் செய்தல், நீர்வழிகளில் அடைத்திருக்கும் செடிகளை அகற்றுதல், வாய்க்கால்களை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.   அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் நீர்வள ஆதாரத் துறை பராமரிப்பின் கீழ் உள்ள 9 ஏரிகளில், ரூ. 74 லட்சம் மதிப்பில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
    இத்திட்டத்தின் கீழ், ஏரி கரை வடிவமைப்பு மட்ட அளவை விட குறைவாகவும், கடைக்கால் பக்கச்சுவர் சேதமடைந்து, பருவமழைக் காலங்களில் ஏரியின் நீரை முழுவதுமாக சேமித்து, பாசன நிலங்களுக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள ஏரிகளை கனரக இயந்திரங்களை பயன்படுத்தி, பணியின் மொத்த மதிப்பில் 10 சதவீதம் மக்கள் பங்களிப்புடன் பணமாக அல்லது உடல் உழைப்பாக கொண்டு ஏரி நீர்பிடிப்பு பகுதிகளில் மண் எடுத்து கரைகளை பலப்படுத்தி, கடைகால் கட்டுமானப் பணிகளை சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் வை. வேல்முருகன், இளநிலை பொறியாளர் எஸ். பாலசுப்ரமணியன், பணி ஆய்வாளர்கள் படைக்காத்தான், ராஜாங்கம், பாசன சங்கத் தலைவர் செல்வராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai