Enable Javscript for better performance
பொதுக் கிணறை ஆக்கிரமித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு- Dinamani

சுடச்சுட

    

    பொதுக் கிணறை ஆக்கிரமித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

    By DIN  |   Published on : 14th March 2017 06:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே பொதுக்கிணறை ஆக்கிரமித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஆட்சியர் க. நந்தகுமாரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
     இதுகுறித்து, கிராம மக்கள் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
    வேப்பந்தட்டை வட்டம், நூத்தப்பூர் பாளையம் கிராமத்தில் பொதுமக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த பொதுக்கிணறு இருந்தது. இந்நிலையில், இந்த கிணறை அதே கிராமத்தை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து, இந்த இடத்திற்கு அவர்களது பெயரில் பட்டா வாங்கியுள்ளனர்.
    அந்த இடத்தில் நியாயவிலைக் கடை கட்டப்பட உள்ளதால், பட்டாவை ரத்து செய்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பொதுபாதை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்:  குன்னம் வட்டம், பேரளி கிராமத்தில் உள்ள தெற்கு தெருவில் கடந்த 20 மாதங்களுக்கு முன், கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால், இதுவரை அந்த பள்ளத்தை மூடாததால் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அந்த வழித்தடத்தை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர்.
    மேலும், அப்பகுதியில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் கொசு உற்பத்தியாகி பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்பட்டு வருகிறது.
    இந்த பள்ளத்தை தோண்டிய முன்னாள் ஊராட்சித் தலைவரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி பள்ளத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அந்த பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
     குடிநீர் வசதிக்கோரி ஆட்சியரிடம் மனு:பெரம்பலூர் அருகேயுள்ள லாடபுரம் கிராமத்தில் மண் ஒட்டர் தெருவில் 545 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
     இப்பகுதியில் உள்ளவர்களுக்கு போதுமான குடிநீர் வசதி ஏற்படுத்தி தராததால், சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிணற்றுப்பகுதிக்கு சென்று குடிநீர் கொண்டு வந்து பயன்படுத்தி வருகிறோம். இதையறிந்த அப்பகுதி மக்கள், குடிநீர் எடுக்க எதிரிப்பு தெரிவிக்கின்றனர்.
    எனவே, எங்கள் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வசதி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai