Enable Javscript for better performance
பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 260 மனுக்கள்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூரில், ஆட்சியரக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 260 மனுக்கள் பெறப்பட்டன.
    கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியர் க. நந்தகுமார், பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து, குறித்த காலத்துக்குள் மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதில் அளிக்குமாறு அறிவுறுத்தினார்.
    மேலும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத் திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்ற வேண்டும் என்று, அரசுத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார் ஆட்சியர்.
    கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப் பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 260 மனுக்கள் பெறப்பட்டன. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பி. துரை, ஊரக வளர்ச்சி முகமை உதவித் திட்ட அலுவலர் கல்யாணி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai