Enable Javscript for better performance
மார்ச் 19-ல் மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் பணிக்கு வேலைவாய்ப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    மார்ச் 19-ல் மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் பணிக்கு வேலைவாய்ப்பு முகாம்

    By DIN  |   Published on : 14th March 2017 06:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது என்றார் ஆட்சியர் க. நந்தகுமார்.
    இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:
    ஓட்டுநர் பணிக்கு ஆண்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள். 10 ஆம் வகுப்பு தேர்ச்சியும், 25 முதல் 35 வயதுக்கு மிகாமல், 162.5 செ.மீட்டர் உயரத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும். இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்று, குறைந்தபட்சம் கனரக வாகன பழகுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
    இவர்களுக்கு எழுத்துத்தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு, நேர்காணல், கண்பார்வை தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வுகள் நடைபெறும். அடிப்படை மருத்துவ உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் ஆண், பெண் இருபாலினரும் 20 முதல் 30 வயதிற்கு மிகாமல், பி.எஸ்.சி நர்சிங், விலங்கியல், தாவரவியல், உயிர் வேதியியல், நுண்ணுயிரியல், பிளாண்ட் பயாலஜி மற்றும் லைப் சைன்ஸ் அல்லது பிளஸ் 2 முடித்து 3 ஆண்டு ஜி.என்.எம் படிப்பு அல்லது எ.என்.எம் அல்லது டிப்ளமோ நர்சிங் உதவியாளர் படிப்பு படித்திருக்க வேண்டும்.  
    பயிற்சி மருத்துவ உதவியாளர் பணிக்கு பிளஸ் 2 முடித்து அரசு மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு டி.எம்.இ பட்டயப்படிப்பு படித்த ஆண், பெண் இருபாலரும் தேர்வு செய்யப்படுவார்கள். 19 முதல் 25 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
    அடிப்படை மருத்துவ உதவியாளர், பயிற்சி மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு, உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பாக நேர்முகத் தேர்வு நடைபெறும்.    மேலும் விவரங்களுக்கு ஒருங்கிணைப்பாளர் கார்த்தியை 7397724840, 7397724859 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். 

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai