Enable Javscript for better performance
இணையதளம் அடிக்கடி பழுது: மின் கட்டணம் செலுத்த இயலாமல் கடும் அவதி- Dinamani

சுடச்சுட

    

    இணையதளம் அடிக்கடி பழுது: மின் கட்டணம் செலுத்த இயலாமல் கடும் அவதி

    By DIN  |   Published on : 15th March 2017 06:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் உள்ள மின் கட்டண வசூலிப்பு மையத்தில், அடிக்கடி இணையதளம் செயல்படாததால் உரிய நேரத்தில் மின் கட்டணம் செலுத்த முடியாமல் நுகர்வோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
    பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் செயல்படும் இந்த மின்வாரிய அலுவலகத்தில் பெரம்பலூர் நகராட்சிப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி கல்பாடி, சிறுகுடல், கவுல்பாளையம், செங்குணம், பீல்வாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களும் மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.
    ஆனால், இங்கு அடிக்கடி இணையதளத்தில் பழுது ஏற்படுவதால், உரிய நேரத்தில் மின் கட்டணம் செலுத்த முடியவில்லை. மேலும், உரிய காலத்தில் வீடுகளில் கணக்கெடுப்பு பணிகளும் நடத்துவதில்லை என நுகர்வோர் குற்றம்சாட்டுகின்றனர்.
    இந்நிலையில், மின் கட்டணம் செலுத்த வேண்டிய கடை தேதி என்பதால், 100-க்கும் மேற்பட்டோர் மின் கட்டண வசூல் மையத்தில் நீண்ட நேரம் வரிசையில் செவ்வாய்க்கிழமை காத்திருந்தனர். இணையதள இணைப்பு செயல்படாததால், அவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.
    இதுகுறித்து பெரம்பலூர், செங்குணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நுகர்வோர் கூறியது: 2 மாதங்களுக்கு ஒரு முறை, மின் கட்டணங்களைச் செலுத்த பல கி.மீ. தொலைவிலிருந்து வருகிறோம். இங்கு நீண்டநேரம் வரிசையில் காத்திருக்கும்போது, தீடீரென கணினி செயல்படவில்லை, இணையதள தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது என அலுவலர்கள் கூறுகின்றனர். இதனால், எங்களால் உரிய நேரத்தில் மின் கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை. இதற்காக, வேறு வேலைகளை ஒத்திவைத்து விட்டு மற்றொரு நாள் வரவேண்டியுள்ளது.
    ஆனால், 20 நாள்களுக்குள் மின் கட்டணத்தைச் செலுத்தாவிட்டால் அபராதத்தை மட்டும் வசூலித்து விடுகின்றனர். கணினிப் பழுதால் ஏற்பட்ட தாமதத்துக்காக கால அவகாசமும் நீட்டிக்கப்படுவதில்லை.
    இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டால், தனியார் கணினி மையங்களில் மின் கட்டணம் செலுத்துங்கள் என்கின்றனர். அங்கு சென்றால் எங்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர் என்றனர்.
    இதுகுறித்து மின்வாரிய அலுவலர்கள் சிலர் கூறியது:
    இந்த அலுவலகத்தில் உள்ள கணினிகள் அடிக்கடி பழுதாகிவிடுகின்றன.
    இணையச் சேவையும் தடைடுவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் உரிய நேரத்தில் மின் கட்டணம் வசூலிக்க முடியாமல் அவதிப்படுகிறோம். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடமும், தொலைதொடர்பு துறை அதிகாரிகளிடமும் பலமுறை தெரிவித்து விட்டோம். ஆனால், நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது என்றனர் அவர்கள்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai