Enable Javscript for better performance
மறியல்: விவசாயிகள் சங்கத்தினர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் புறநகர்ப் பேருந்து நிலையம் எதிரே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த 49 பேரை பெரம்பலூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
    மாவட்டச் செயலர் என். செல்லதுரை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வறட்சியால் உயிரிழந்த விவசாயக் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். தற்கொலைச் சாவுகளை தடுக்க விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். பயிர்க் காப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்க வேண்டும். குடிநீர் பற்றாக்குறையைத் தடுக்க வாகனங்கள் மூலம் குடிநீர் விநியோகிக்க வேண்டும்.
    பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ரூ. 25 ஆயிரம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.
    கரும்புக்கு ரூ. 4 ஆயிரமும், நிலுவைத் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும். மானிய விலையில் கால்நடைத் தீவனம் வழங்க வேண்டும். ஏரி, குளங்கள், வாய்க்கால்களில் மராமத்துப் பணி மேற்கொள்ள வேண்டும். ஓய்வூதியம் நிறுத்தப்பட்ட முதியோருக்கு உடனே வழங்க வேண்டும். பொம்மனப்பாடி, மரவநத்தம், அய்யனார்பாளையம் ஆகிய கிராம மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    புறநகர் பேருந்து நிலையம் எதிரே நடந்த போராட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் பி. ரமேஷ், மாதர் சங்க மாவட்டச் செயலர் ஏ. கலையரசி, மாவட்டப் பொருளாளர் ஏ.கே. ராஜேந்திரன், எஸ். அகஸ்டின், நிர்வாகிகள் ஏ. அன்பழகன், எஸ்.பி.டி. ராஜாங்கம், எஸ். ஆறுமுகம், பி. கிருஷ்ணசாமி, பி. ரெங்கநாதன் உள்ளிடோர் ஈடுபட்டனர்.
    இதையடுத்து 12 பெண்கள் உள்ளிட்ட 49 பேரை பெரம்பலூர் போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.         
    அரியலூரில். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும்,உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.  அரியலூர் மாவட்டத்தில் பஞ்சமி நிலங்களை மீட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.  
    அரியலூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் அனைவருக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
    விவசாய சங்க மாவட்டத் தலைவர் பி. பிச்சைப்பிள்ளை தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் எம். மணியன் உள்ளிட்டோர் பேசினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai