Enable Javscript for better performance
மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், 2015- 16 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில் மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ், பரிசுத் தொகை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
    பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் மாநில அளவில் 3 ஆம் இடம் பெற்ற மாணவர் அ. ராம்கார்த்திக், மிகப்பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் மாணவிகள் ரெ. நந்தினி, அ. கரிஷ்மா, சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த மாணவி சே. அல்நிஹா செரின் ஆகியோருக்கு ரூ. 15 ஆயிரம் பரிசுத் தொகை, முதல்வரின் நற்சான்றுகளை செவ்வாய்க்கிழமை வழங்கிப் பாராட்டினார் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கு. மோகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai