Enable Javscript for better performance
முடங்கியுள்ள திட்டங்கள்: தமாகா ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் ஆட்சியரகம் எதிரே, முடங்கியுள்ள திட்டங்களை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
    மாவட்டத் தலைவர் வி. கிருஷ்ண ஜனார்த்தனன் தலைமை வகித்தார். மேலிடப் பொறுப்பாளர் எஸ். புரட்சிமணி முன்னிலை வகித்தார்.
    ஆர்ப்பாட்டத்தில், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் செயல்படுத்தப்பட உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை அமல்படுத்த வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
    நியாய விலைக்கடைகளில் தட்டுப்பாடின்றி அத்தியாவசியப் பொருள்கள் வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் மதுக் கடைகளை மூட வேண்டும். விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும். பெரம்பலூரில் கிடப்பில் போடப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரியைத் தொடங்க வேண்டும். குன்னம், வேப்பந்தட்டைப் பகுதிகளில் பேருந்துப் பணிமனை வழங்க வேண்டும்.
    பெரம்பலூர் - கடலூர் மாவட்டத்தை இணைக்கும் வெள்ளுவாடி- கொரக்கவாடி பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும். பாடாலூர் ஆலத்தூர் கேட் ஆகிய பகுதிகளில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
    வட்டாரத் தலைவர்கள் ஆர். சித்தார்த்தன், மோகன், செல்வராஜ், மாநில தொண்டரணி செயலர்கள் ஏ. வேல்முருகன், பி. வேல்முருகன், மாவட்ட தொண்டரணித் தலைவர் பி. திருமூர்த்தி, விவசாய அணித் தலைவர் தேவேந்திரன், மாநில கொள்கைப் பரப்பு செயலர் சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அரியலூரில்..  நியாயவிலைக் கடைகளில் அரிசி,சர்க்கரை, பருப்பு,பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை தங்கு தடையின்றி வழங்க வேண்டும். குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும். வறட்சி நிவாரணம் விரைவாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அரியலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்குகட்சியின் மாவட்டச் செயலர் குமார் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் புரட்சி மணிகண்டன் பங்கேற்று பேசினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai