Enable Javscript for better performance
ஊரக வளர்ச்சித்துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
    ஊராட்சி செயலர்களுக்கு உடனடியாக காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அரசாணை படியும், உயர்நீதிமன்ற தீர்ப்பின் படியும்
    ரூ. 15,600 ஊதியமாகவும், ரூ. 5,100 தர ஊதியமாகவும், ரூ. 1,000 படிகளுடன் வழங்க வேண்டும். உதவி இயக்குநர், இணை இயக்குநர் கூடுதல் இயக்குநர் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
    வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் ஒன்றியங்களில் தனி ஊழியர் கட்டமைப்பு உருவாக்க வேண்டும். கணினி இயக்குநர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
    முழு சுகாதார ஒருங்கிணைப்பாளர்களுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    இந்நிலையில், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முதல் ஊராட்சி செயலர்கள் வரையிலான பதவியில் உள்ளவர்கள் பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    முன்னதாக, பெரம்பலூர் பாரத ஸ்டேட் வங்கி அருகிலிருந்து தொடங்கிய பேரணி வெங்கடேசபுரம் வழியாக பாலக்கரையில் நிறைவடைந்தது.
    அரியலூரில்... கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 2ஆவது நாளாக புதன்கிழமையும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    அரியலூர் மாவட்டத்திலுள்ள அரியலூர், திருமானூர், தா.பழூர்,ஜயங்கொண்டம்,ஆண்டிமடம்,செந்துறை ஆகிய 6 ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் பணிபுரியும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் என 344 பேரும் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai