Enable Javscript for better performance
சமூகப் பாதுகாப்புத் துறையில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    சமூகப் பாதுகாப்புத் துறையில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 16th March 2017 07:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்ட சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் நிறுவனத்தில் காலியாக உள்ள பாதுகாவலர், சமையலர், காவலர், தோட்டப் பணியாளர், சுத்திகரிப்பாளர் பணியிடங்களுக்கு முன்னாள் ரணுவத்தினர் மற்றும் பிற்பட்ட முஸ்லிம் வகுப்பைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் நிறுவனத்தில் காலியாக உள்ள 1 பாதுகாவலர் (ஆண் மட்டும்), 1 சமையலர் (இருபாலர்), 1 காவலர் (ஆண் மட்டும்), தோட்டப் பணியாளர் (இருபாலர்), 1 சுத்திகரிப்பாளர் (ஆண் மட்டும்) ஆகிய பணியிடங்கள் முன்னாள் ரணுவத்தினர் மற்றும் பிற்பட்ட முஸ்லிம் வகுப்பைச் சேர்ந்த முன்னுரிமை பெற்ற சமூகப் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்களில் கல்வி பயின்ற, பயின்று வரும் மாணவ, மாணவிகளைக் கொண்டு நிரப்பப்பட உள்ளது.  தகுதியானவர்கள் அதற்கான படிவத்தை
    w‌w‌w.‌p‌e‌r​a‌m​b​a‌l‌u‌r.‌t‌n.‌n‌ic.‌i‌n  பெரம்பலூர் மாவட்ட இணையதளம் அல்லது w‌w‌w.‌s‌o​c‌i​a‌l‌d‌e‌f‌e‌n​c‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n​  இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கல்வி மற்றும் இதர சான்றிதழின் நகலுடன் மார்ச் 25ஆம் தேதிக்குள் இயக்குநர் அலுவலகம், சமூகப் பாதுகாப்புத் துறை, 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லிஸ், அபிராமி தியேட்டர் அருகில், சென்னை 600010 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
    மேலும் விவரங்களுக்கு 044-26426421, 26427022 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai