Enable Javscript for better performance
"சீமைக் கருவேல மரங்களை அழிப்பது பொதுமக்கள் கடமையாகும்'- Dinamani

சுடச்சுட

    

    "சீமைக் கருவேல மரங்களை அழிப்பது பொதுமக்கள் கடமையாகும்'

    By DIN  |   Published on : 16th March 2017 07:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீமைக் கருவேல மரங்களை அழிப்பது பொதுமக்களின் கடமையாகும் என்றார் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஏ. நசீமாபானு. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை மற்றும் ஆலத்தூர் வட்டங்களுக்குள்பட்ட பகுதிகளில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை, பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஏ. நசீமா பானு தலைமையிலான நீதிபதிகள் புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
    ஆய்வில், வேப்பந்தட்டை வட்டம், தழுதாழை, வெங்கலம், பாண்டகப்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளிலும், ஆலத்தூர் வட்டம், காரை, இரூர், செட்டிக்குளம் ஆகிய பகுதிகளில் 100 ஹெக்டேர் பரப்பளவில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் வேருடன் அகற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட முதன்மை நீதிபதி கூறியது:
    பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களிலும் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படுகிறது. இதுபோல, தனியார் நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை நிலத்தின் உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து அகற்றிக்கொள்ள வேண்டும். அவ்வாறு அகற்றப்படாத பட்சத்தில், சம்மந்தப்பட்ட துறைகள் மூலமாக சீமைக்கருவேல் மரங்கள் வேருடன் அகற்றப்பட்டு, அதற்குண்டான செலவின தொகையை இருமடங்காக சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும். இந்த மரங்களை வேருடன் அழிப்பது பொதுமக்களின் கடமையாகும் என்றார் அவர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai