Enable Javscript for better performance
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரே, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
    மாவட்டத் தலைவர் கி. ஆளவந்தார் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்கள் பி. தயாளன், சா. இளங்கோவன், ம. செல்வபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ச. மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    ஆர்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 1.1.2016 முதல் 20 சதவீத இடைக்கால நிவாரணம், சிறப்பு காலமுறை ஊதியத்தை ரத்து செய்து, வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி மற்றும் அவுட்சோர்சிங் முறையிலான நியமனங்களை ரத்து செய்து காலியாக உள்ள பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் கொண்டுவர வேண்டும்.
    சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
    தொடர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி பாரத ஸ்டேட் வங்கி அருகிலிருந்து தொடங்கிய பேரணி வெங்கடேசபுரம் வழியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் நிறைவடைந்தது. பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai