Enable Javscript for better performance
மனுநீதி நிறைவு நாள் முகாமில் ரூ. 50.28 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்- Dinamani

சுடச்சுட

    

    மனுநீதி நிறைவு நாள் முகாமில் ரூ. 50.28 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

    By DIN  |   Published on : 16th March 2017 07:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எழுமூர் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாமில், 127 பயனாளிகளுக்கு ரூ. 50.28 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், எழுமூர் (மே) கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நிறைவு நாள் முகாமில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட வருவாய் அலுவலர் பி. வேலு பேசியது:
    அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத் திட்டங்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், இதுபோன்ற முகாம்கள் நடத்தப்படுகின்றன.
    கடந்த மாதம் முழுவதும் எழுமூர் உள்ளிட்ட கிராமங்களில் அரசு அலுவலர்கள் முகாமிட்டு, பயனாளிகளை கண்டறிந்து, பல்வேறு துறைகளின் மூலம் 127 பயனாளிகளுக்கு ரூ. 50,28,625 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.   
    அடிப்படை வசதிகளான குடிநீர், தெரு விளக்கு, சாலை பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளை களைய 18004254556 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்.
    திறந்தவெளி கழிப்பிடமில்லா மாவட்டமாக பெரம்பலூரை உருவாக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்றிமையாததாகும். எனவே, அனைவரும் தங்களது இல்லங்களில் தனிநபர் கழிப்பறைகள் கட்ட முன்வர வேண்டும்.
    வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டு தனிநபர் இல்லக்கழிப்பறைகள் அமைக்க மனு அளிக்கலாம்  என்றார் அவர்.
    சமூக பாதுகாப்புத்திட்ட தனித் துணை ஆட்சியர் புஷ்பவதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மோகன், வருவாய் வட்டாட்சியர் தமிழரசன், சமூக பாதுகாப்புத்திட்ட வட்டாட்சியர் மனோண்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai