Enable Javscript for better performance
மார்ச் 18 வரை ரூபெல்லா தடுப்பூசி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டத்தில் தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி முகாம் மார்ச் 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ப. சம்பத்.
    இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிப். 6 முதல் மார்ச் 15ஆம் தேதி வரை தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி முகாம் நடைபெற்று வந்தது.
    இதில், 9 மாதம் முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும், இதுவரை 1.10 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
    மேலும், தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்லும் பெற்றோர்களின் வசதிக்காக, மார்ச் 18ஆம் தேதி வரை இது நீட்டிக்கப்பட்டுள்ளது.
    எனவே, குழந்தைகளை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அழைத்துச் சென்று, தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai