Enable Javscript for better performance
மோசடி நிதி நிறுவனங்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மோசடி நிதி நிறுவனங்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம்

    By DIN  |   Published on : 16th March 2017 08:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்ட வணிக குற்றப் புலனாய்வு பிரிவு சார்பில், போலி மோசடி நிதி நிறுவனங்கள் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் மற்றும் பேரணி குரும்பலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு, அரியலூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் தயாளன் தலைமை வகித்தார். துணை பதிவாளர்கள் பாண்டிதுரை, செல்வராஜ், கல்லூரி பேராசிரியர்கள் முருகன், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் மாவட்ட கூடுதல் துணை கண்காணிப்பாளர் ஞானசிவக்குமார், போலி மற்றும் மோசடி நிதி நிறுவனங்கள் குறித்து விளக்க உரையாற்றினார்.
    கல்லூரி மாணவ, மாணவிகள், கூட்டுறவுத்துறை அலுவலர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
    முன்னதாக, மோசடி நிதி நிறுவனங்கள் குறித்த விழிப்பணர்வு பேரணி நடைபெற்றது. தொடர்ந்து, விழிப்புணர்வு குறும்படம் ஒளிப்பரப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. 

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai