Enable Javscript for better performance
அஞ்சலக துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள அஞ்சல் துறை ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர். இதனால், அஞ்சலக சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.
    7-வது ஊதியக்குழுவின் ஊழியருக்கு எதிரான பரிந்துரைகளை முழுமையாக மாற்றி அமல்படுத்த வேண்டும். இலாகா துறையில் உள்ள பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளித்து, அதற்கான பணிக் கொடை வழங்க வேண்டும். பணிக்கான ஊதிய உயர்வு வழங்க வேண்டும். காலியிடங்களை நிரப்ப வேண்டும். அரசுப்பணிகளில் தனியார்மயம், அவுட்சோர்சிங், ஒப்பந்தமயம் ஆகியவற்றை அனுமதிக்கக் கூடாது.
    கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான 5 சதவீத உச்ச வரம்பை நீக்க வேண்டும். தகுதியுள்ள அனைவருக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும். அலுவலர்களுக்கு பணிக்காலத்திற்குள் 5 கட்டப் பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுக்கப்பட்டது.
    அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தலைமை அஞ்சல் நிலையம், 20 துணை அஞ்சலகம் உள்பட 75 அஞ்சல் நிலைய அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    னஇதேபோல, அரியலூர் மாவட்டத்தில் 600 பேர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பட்டுவாடா, பணப் பரிமாற்றம், கடிதப் போக்குவரத்து ஆகியவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதேபோல மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் பணிபுரியும் 5 பேரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai