Enable Javscript for better performance
கறிக்கோழி விவசாயிகளை பாதுகாக்கக் கோரி ஆட்சியரிடம் மனு- Dinamani

சுடச்சுட

    

    கறிக்கோழி விவசாயிகளை பாதுகாக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

    By DIN  |   Published on : 17th March 2017 05:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக அரசின் கறிக்கோழி வளர்ப்பு சிறப்புத் திட்டத்தின் கீழ், வங்கிக் கடன் பெற்று திரும்பச் செலுத்த முடியாத விவசாயிகளுக்கு நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்க உள்ளதைத் தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
    இதுகுறித்து கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த அன்னமங்கலம்  செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமாரிடம் வியாழக்கிழமை அளித்த மனு:
    தமிழக அரசின் கறிக்கோழி வளர்ப்பு சிறப்புத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு, வங்கிக் கடன் பெற்று கறிக்கோழி வளர்த்து வந்தேன்.
    ஆனால், கோழிக்குஞ்சு வழங்கும் நிறுவனம் முறையாக கோழிக்குஞ்சு வழங்காததால் வங்கி கடனைத் திரும்பச் செலுத்த இயலவில்லை.
    இந்நிலையில், வங்கியாளர்கள் வங்கிக் கடனை செலுத்தக் கூறி வழக்குரைஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில், செலுத்த வேண்டிய கடன் தொகை முழுவதையும் 30 நாள்களுக்குள் செல்லவேண்டும்.
    இல்லையென்றால், அரசு சலுகைகள் பெறத் தடை விதிக்கவும், கடன்தாரர்களின் புகைப்படம், கடன் விவரங்களை நாளிதழ் மற்றும் பொது இடங்களில் வெளியிடவும், நீதிமன்றத்தின் மூலம் வழக்குத் தொடரப்படும் என எச்சரித்துள்ளனர்.
    இது மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர். எனவே நீதிமன்ற நடவடிக்கையைத்  தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai