Enable Javscript for better performance
கிணற்றில் இளம்பெண் சடலம்: காதலன் மீது புகார்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் அருகே குரும்பலூர் பகுதியில் உள்ள கிணற்றில் வியாழக்கிழமை இளம்பெண் சடலமாகக் கிடந்தார். அப்பெண் கொல்லப்பட்டதாக அவரின் காதலன், குடும்பத்தினர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.
    குரும்பலூரைச் சேர்ந்த முத்துசாமி தனக்குச் சொந்தமான விவசாய கிணற்றிலிருந்து வியாழக்கிழமை துர்நாற்றம் வீசியதால், உள்ளே பார்த்தாராம். அப்போது, கிணற்றில் இளம்பெண்ணின் சடலம் மிதந்தது தெரியவந்ததையடுத்து போலீஸாருக்கு தகவல் அளித்தார்.
    இதையடுத்து பெரம்பலூர் போலீஸாரும், தீயணைப்பு படையினரும் வந்து அச்சடலத்தை மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், இறந்தவர் குரும்பலூர் புதுக்காலனியை சேர்ந்த தங்கவேல் மகள் ஐஸ்வர்யா (22) என்பதும், 10 ஆம் வகுப்பு முடித்து விட்டு கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அவர் கடந்த 12 ஆம் தேதி வீட்டுக்கு வந்து காணாமல்போனதும் தெரியவந்தது. புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.      
    இந்நிலையில், தனது மகளின் சாவுக்கு காரணமானோர் மீது நடவடிக்கை கோரி அவரது தந்தை தங்கவேல் மற்றும் பொதுமக்கள் சார்பில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சோனல்சந்த்ராவிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது. மனுவில் தெரிவித்துள்ளது:
    ஐஸ்வர்யாவும், நாவலூர் கிராமத்தைச் சேர்ந்த பார்த்தீபனும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 11 ஆம் தேதி பார்த்தீபன் வீட்டுக்குச் சென்ற ஐஸ்வர்யா தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டார். அதன்பிறகு, எனது மகள் வீட்டுக்கு வரவில்லை.
    இந்நிலையில், குரும்பலூர் பகுதியில் உள்ள கிணற்றில் அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. எனது மகளை பார்த்தீபன், அவரது நண்பர் சின்னசாமி, பார்த்தீபனின் பெற்றோர் ஆகியோர் திட்டமிட்டுக் கொலை செய்து கிணற்றில் வீசியுள்ளனர். எனவே, எனது மகளின் சாவுக்கு காரணமானோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai