Enable Javscript for better performance
தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்ட தேமுதிக தலைமை அலுவலகத்தில், கட்சியின் உட்கட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
    கூட்டத்துக்குத் தலைமை வகித்த தேர்தல் பொருப்பாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர். சுபா பேசியது: பெரம்பலூர் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் புதிய உறுப்பினர்களை அதிகமாகச் சேர்க்க வேண்டும்.
    அதேபோல பழைய உறுப்பினர் அட்டை வைத்துள்ளவர்கள் அட்டையை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். 15 நாள்களுக்குள் கிளைக் கழகம் அமைத்து, கிளை நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட்டு
    நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கபடுவர் என்றார். மாவட்டச் செயலர் துரை. காமராஜ் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட அவைத் தலைவர் மா. கணபதி, துணைச் செயலர் ஆர். கண்ணுச்சாமி, ஒன்றியச் செயலர்கள் சிவா ஐயப்பன், சாமிதுரை, மலர் மன்னன், நகரச் செயலர் ஜெயக்குமார், மாவட்ட அணிச் செயலர்கள் தவசி. அன்பழகன், முத்தமிழ்செல்வன், சஞ்சீவி     உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai