Enable Javscript for better performance
தொடரும் ஊரக வளர்ச்சித் துறை ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    உதவி இயக்குநர், இணை இயக்குநர் கூடுதல் இயக்குநர் காலியிடங்களை பதவி உயர்வு வழி உடனே நிரப்ப வேண்டும். கணினி இயக்குநர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
    வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் ஒன்றியங்களில் தனி ஊழியர் கட்டமைப்பு உருவாக்க வேண்டும். கணினி இயக்குநர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். முழு சுகாதார ஒருங்கிணைப்பாளர்களுக்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். ஒன்றியப் பணி மேற்பார்வையாளர்கள் அளவீட்டிற்கான தொழில்நுட்ப மதிபீட்டை ரூ. 3 லட்சமாக உயர்த்த வேண்டும். ஒன்றியப் பணி மேற்பார்வையாளர்களுக்கு பணிவிதி திருத்தத்தின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். சாலை ஆய்வாளர்களுக்கு பணிபுரிந்த ஆண்டுகளை கணக்கில் கொண்டு பதவி உயர்வு வழங்க வேண்டும்.
    அலுவலக உதவியாளர் பதிவுறு எழுத்தருக்கு, பதவி உயர்வு மற்றும் ஊராட்சி செயலருக்கு பதவி உயர்வுக்கான தேக்க நிலையைப் போக்க, ஏற்கெனவே உள்ள அரசாணைப்படி மாவட்ட ஆட்சியரே பணி நியமனம் செய்து பின்னேற்பு வழங்குவதற்கான உத்தரவு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 14 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மாவட்டத் தலைவர் இ. மரியதாஸ் தலைமையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    இதேபோல, அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், திருமானூர், தா.பழூர், ஜயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை ஆகிய 6 ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஆட்சியரகத்தில் பணிபுரியும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் என 344 பேர் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai