Enable Javscript for better performance
நல்லறிக்கை கிராமத்தில் இன்று அம்மா திட்ட முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், நல்லறிக்கை கிராமத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (பிப். 17) நடைபெற உள்ளது.  
    இந்த முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் உடனடியாகப் பரிசீலிக்கப்பட்டு, உரிய ஆணைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு பெறப்படும் மனுக்கள் கணினியில் பதியப்பட்டு ஒப்புகை ரசீது வழங்கப்படும். உடனடியாக தீர்வு காண இயலாத விண்ணப்பங்களின் மனுதாரருக்கு 30 நாள்களுக்குள் பதில் தெரிவிக்கப்படும். எனவே, நல்லறிக்கை கிராம மக்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai