Enable Javscript for better performance
மீன்வள உதவியாளர்  பணிக்கான பரிந்துரையை சரிபார்க்க அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    மீன்வள உதவியாளர்  பணிக்கான பரிந்துரையை சரிபார்க்க அழைப்பு

    By DIN  |   Published on : 17th March 2017 06:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாகவுள்ள ஒரு மீன்வள உதவியாளர் காலிப்பணியிடத்திற்கான பரிந்துரையை மார்ச் 20-க்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சரிப்பார்த்துக் கொள்ளலாம்.
    தமிழில் எழுதப்படிக்கவும், நீச்சல், வலைவீசி மீன் பிடித்தல், மீன்பிடி வலையில் ஏற்படும் பழுதைச் சரிபார்க்கத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது வரம்பு 18. உச்ச வயது வரம்பு 1.5.2016-ல் பொதுப்பிரிவிற்கு 30 வயதுக்கு மிகாமலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பினர் 32 வயதிற்கு மிகாமலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 35 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
    இத் தகுதிகளுடன் 28.2.2017-க்கு முன் மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் பதிந்துள்ள பதிவுதாரர்கள் மார்ச் 20-க்குள் மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் கல்விச்சான்று, வலைவீசி மீன்பிடிக்க முன் அனுபவம் பெற்றமைக்கான சான்று, புதுப்பிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் நேரில் சென்று பதிவை சரிபார்த்துக் கொள்ளலாம் என மாவட்ட வேலைவாய்ப்பகம் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai