Enable Javscript for better performance
மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவோர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார்.
    பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படுவது குறித்து, ரோஸ்நகர், அசோக்நகர், சோமண்டாபுதூர் உள்ளிட்ட பகுதிகளை செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார். அப்போது ரோஸ்நகரில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டி, அசோக் நகரில் ரூ. 30 லட்சத்தில் மேற்கொள்ளப்படும் கிணறு வெட்டும் பணி, 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளை ஆட்சியர் பார்வையிட்டார். தொடர்ந்து, அசோக்நகரில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிக்கு குடிநீர் கொண்டுவரும் பணிகளையும், சோமண்டாபுதூரில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கிணறையும் பார்வையிட்ட ஆட்சியர் கூறியது:
    வறட்சி காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத வகையில், பொதுமக்களுக்கு குடிநீரை விநியோகிக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், பொதுமக்கள் சிலர் சட்டத்திற்குப் புறம்பாக மோட்டார் மற்றும் குழாய்களிலிருந்து வீடுகளுக்கு குடிநீர் கொண்டுசெல்லும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.
    இது முற்றிலும் விதிமீறல். இதுபோன்ற பணிகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சம்மந்தப்பட்டோரின் குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும். எனவே, பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றார் ஆட்சியர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai