Enable Javscript for better performance
விபத்து இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூரில் விபத்து இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
    அரியலூர் மாவட்டம், இளையபெருமாள் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் கொடியரசன் (27), கட்டடத் தொழிலாளி. இவர், கடந்த 27.11.2013-ல் அதே பகுதியைச் சேர்ந்த தனது மண்பர் சுரேஷுடன் (30) மோட்டார் சைக்கிளில் புதுச்சாவடி அருகே சென்றபோது அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தார். காயமடைந்த சுரேஷ் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
    இதனிடையே இறந்தவரின் தந்தை ராமச்சந்திரன், தாய் லட்சுமி ஆகியோர் அரசு போக்குவரத்துக் கழகம் விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்க கோரி, பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 25.2.14-ல் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி இழப்பீட்டுத் தொகையாக ரூ. 12 லட்சத்து 95 ஆயிரம் வழங்க வேண்டுமென, கடந்த 23.11.2015-ல் உத்தரவிட்டார். ஆனால், அரசு போக்குவரத்துக் கழகத்தினர் அந்தத் தொகையை வழங்கவில்லை.
    இதையடுத்து, கடந்த 27.4.2016-ல் தாக்கல் செய்யப்பட்ட நிறைவேற்று மனு தாக்கல் மனுவை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஏ. நஷிமாபானு, ராமச்சந்திரன், லட்சுமி ஆகியோருக்கு வட்டியுடன் சேர்த்து, ரூ. 16 லட்சத்து 353 வழங்க வேண்டும் எனவும், அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து, பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த திருச்சி- சென்னை அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் வியாழக்கிழமை ஜப்தி செய்து, நீதிமன்ற வளாகத்துக்குக் கொண்டு சென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai