Enable Javscript for better performance
அரசுப் பேருந்து ஜப்தி- Dinamani

சுடச்சுட

    

    விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்காத அரசுப் பேருந்து பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள சடைக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் முருகேசன் (38). இவர், கடந்த 2012-ல் சடைக்கன்பட்டி பிரிவு சாலை அருகே நடந்து சென்றபோது, அவ்வழியே சென்ற அரசுப் பேருந்து மோதியதில், வலதுகாலில் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றார்.
    இதையடுத்து, விபத்து இழப்பீட்டுத் தொகை கோரி பெரம்பலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இதில், முருகேசனுக்கு ரூ. 5.75 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க, அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு கடந்த 2014-ம் ஆண்டில் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இழப்பீடு வழங்கப்படாததால், மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் 2015-ல் முருகேசன் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ. நஷிமா பானு, பாதிக்கப்பட்டவருக்கு வட்டியுடன் சேர்த்து ரூ. 7,53,503 வழங்க வேண்டும் எனவும், அரசுப் பேருந்தை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டார். இதையடுத்து, விழுப்புரத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசுப் பேருந்தை பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையத்தில் நீதிமன்ற ஊழியர்கள் வெள்ளிக்கிழமை ஜப்தி செய்து, நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டுசென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai