Enable Javscript for better performance
ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிக்கு ரூ.12 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிக்கு ரூ.12 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

    By DIN  |   Published on : 18th March 2017 06:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வருவாய்த் துறையினர் ஓய்வுபெற்ற காவல் துறை உதவி ஆய்வாளருக்கு ரூ. 12 ஆயிரம் இழப்பீடு வழங்க, பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
    வேப்பந்தட்டை வட்டம், வெங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால். ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர்.
    இவர், தனக்கு சொந்தமான வீட்டுமனையை அளந்து கொடுப்பதற்காக, அதற்கான தொகையுடன் கடந்த 24.4.2013-ல் வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
    ஆனால், அவரது நிலத்தை அளந்து தரவில்லையாம். இதையடுத்து, தனது நிலத்தை அளந்து தருவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் 28.7.14-ல் மனு அளித்தார். தொடர்ந்து, ஆட்சியரின் உத்தரவின் பேரில், அந்த நிலத்தை அளந்து கொடுக்க வேண்டுமென வட்டாட்சியருக்கு உதவி இயக்குநர் உத்தரவிட்டார்.
    அதன்பிறகும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் பாதிக்கப்பட்ட தனபால், பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த 16.12.15-ல் வழக்கு தொடுத்தார்.
    வழக்கை விசாரித்த நீதிபதி கலியமூர்த்தி தலைமையிலான உறுப்பினர்கள், மன உளைச்சலுக்கு உள்ளான தனபாலுக்கு, வேப்பந்தட்டை வட்டாட்சியர், வட்டார நில அளவையர், பகுதி நில அளவையர் ஆகியோர் இழப்பீட்டுத் தொகையாக ரூ. 10 ஆயிரமும், வழக்கு செலவுத் தொகையாக ரூ. 2 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai