Enable Javscript for better performance
குரும்பலூர் பல்கலைக்கழக மையத்தில் போட்டித் தேர்வு பயிற்சி: 200 பேர் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    குரும்பலூர் பல்கலைக்கழக மையத்தில் போட்டித் தேர்வு பயிற்சி: 200 பேர் பங்கேற்பு

    By DIN  |   Published on : 18th March 2017 06:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் அருகே குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையத்தின் வேலைவாய்ப்புப் பிரிவு, என்எஸ்எஸ் சார்பில், மாணவ, மாணவிகளுக்கு தகுதித்தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    விரிவாக்க மைய இயக்குநர் முனைவர் இரா. மாலதி தலைமை வகித்தார். ஆத்தூர் அறிஞர் அண்ணா கலை, அறிவியல் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியர் முனைவர் சி. நல்லதம்பி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று தேசிய தகுதித்தேர்வு மற்றும் போட்டித்தேர்வுகள் குறித்தும், தயாராவது, தேர்வு எழுதும் முறை குறித்தும் பயிற்சி அளித்தார்.
    நிகழ்ச்சியில், முதுநிலை விரிவாக்க மையத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் அனைத்துத் துறை பேராசிரியர்கள் பங்கேற்றனர்.மைய வேலைவாய்ப்புப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் வி. அர்ச்சனா வரவேற்றார். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர். அனிதா நன்றி கூறினார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai