Enable Javscript for better performance
"பெண்கள் சுயசார்புடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்'- Dinamani

சுடச்சுட

    

    பெண்கள் எப்போதும் சுயசார்புடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்றார் மகிளா நீதிமன்ற நடுவர் கே. மோகனபிரியா.
    பெரம்பலூர் ஸ்ரீசாரதா மகளிர் கலை, அறிவியல் கல்லூரி விளையாட்டு விழா, ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம். சிவசுப்பிரமணியம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி நீதிபதி மேலும் பேசியது:  
    மாணவிகள் வாழ்வில், வெற்றி, தோல்விகளை சரிசமமாக எடுத்துக்கொள்ளும் மனப்பான்மையை விளையாட்டு அளிக்கிறது. படித்து முடித்தவுடன், நாம் என்னவாக ஆகவேண்டும் என்பதை, படிக்கும்போதே தீர்மானித்து அதற்கேற்ற முயற்சிகளை செய்யவேண்டும். லட்சியமில்லாத வாழ்க்கை வெற்றி பெறாது. அறிவையும், திறமையையும் ஒருங்கே வளர்த்துக் கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும். மாணவிகள் குறிக்கோளுடன் செயல்பட்டால் தான் லட்சியம் என்னும் இலக்கை அடைய முடியும். ஆர்வமுள்ள துறைகளில் உங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். எப்போதும் சுயசார்புடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். அனைத்து போட்டித் தேர்வுகளையும் எழுத வேண்டும். அதில், தோல்வி ஏற்பட்டாலும் அதையே அனுபவமாக எடுத்துக் கொண்டு, கூடுதலாக முயன்று நல்லதொரு பணியில் அமரவேண்டும் என்றார் நீதிபதி.
    விழாவில், கல்வி நிறுவனங்களின் செயலர் எம்.எஸ். விவேகானந்தன், கல்லூரி முதல்வர் எஸ்.ஏ. கண்ணகி உள்ளிட்ட துறைத் தலைவர்கள், பேராசியர்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.
    கணிதவியல் துறைத் தலைவர் ஜி. யமுனா, நுண்ணுயிரியல் துறைத் தலைவர் வி. அருணா ஆகியோர் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai